Monday, 17 July 2017

விருது அறிமுக உரை

(ஜூலை 15 2017 அன்று நிறைவடைந்த விருதுவிழாவில் வாசிக்கப்பட்ட விருது அறிமுக உரை.)

அரிமளம் வைத்தியர் என்று அறியப்படும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தந்தையிடமிருந்து குருமுகமாக மிக இளம் வயதிலேயே சித்த மருத்துவத்தை பயின்றவர். இப்பகுதி என்றில்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடுகளில் இருந்தும் அவரைக் காண நோயுற்றவர்கள் வருவதுண்டு. நிதானமான பேச்சும், எளிமையும், குறைந்த செலவும் அரிமளம் வைத்தியரின் முக்கிய பண்பாக கருதப்படுகிறது. அவ்வகையில் அவருடைய பங்களிப்பை நினைவுகூறும் வகையில் அவர் பெயரில் இந்திய மருத்துவ வளர்ச்சிக்கு பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு ஒரு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒரு  விருது அளிக்க வேண்டும் எனும் யோசனை உதித்தது. விருது தொகை பெரிதில்லை என்றாலும் ஒரு சிறிய ஊக்கத்தை அளிக்கும், நாளடைவில் இத்தொகை இதற்கென உருவாக்கப்படும் வைப்பு நிதியிலிருந்து வளரக்கூடும்.

நவீன காலகட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளின் மிக முக்கியமான சவால் என்பது அறிவியலுடன் அதுகொள்ளும் உறவே. அனுபவபூர்வமாக நிறுவினால் போதாது, அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டிய நிர்பந்தம் நமக்கிருக்கிறது. அறிவியல் அழுத்தம் சரிவர எதிர்கொள்ளப்படவில்லை என்றால் நாம் நாளடைவில் பாரம்பரிய இந்திய மருத்துவத்தை முற்றிலுமாக இழந்துவிடக்கூடும். அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்ட பகுதிகள் நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கிகொள்ளப்படும்.

இந்திய மருத்துவத்துறை மருத்துவர்களிடம் சில வினோதமான முரண்பாடுகளை நாம் காண முடிகிறது. ஒருபுறம் எங்கள் மருத்துவத்துறை மிகவும் தொன்மையானது, மிகவும் உயர்ந்தது என்று பேசிக்கொண்டே மறுபுறம் நவீன மருத்துவம் புரிவதற்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பது. இருவிதமான நம்பிக்கை சிறைகளில் நாம் அடைப்பட்டு இருக்கிறோம். நவீன மருத்துவம் கேடானது, பாரம்பரிய மருத்துவம் உயர்வானது என்பது ஒருநிலை நவீன மருத்துவம் உயர்ந்தது பாரம்பரிய மருத்துவம் வெறும் மூட நம்பிக்கைகளின் தொகை. நமது இறுகிய நம்பிக்கைகள் நம்மை உண்மைக்கு அருகே அழைத்து செல்வதில்லை. நமக்கு வசதியான வெளியை விட்டு வெளியே வந்து ஆய்ந்து நோக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த விருது இந்த எல்லையை உணர்ந்து தமது எல்லைகளை விஸ்தரிக்க முயலும் நவயுக இந்திய மருத்துவர்களுக்கானது. அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். காழ்ப்பும் பற்றும் இன்றி துறை அறிவுடன் இரண்டு மருத்துவ துறைகளையும் ஒருங்கே நோக்கும் மருத்துவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்விருதுக்கான இந்த அளவுகோலின் படி நாங்கள் பரிசீலித்த நான்கைந்து பெயர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் டாக்டர்.திரு நாராயணன்.  தொடர்ந்து அறிவியல் பூர்வமான சித்த மருத்துவத்தை அவருடைய ctmr அமைப்பு மூலம் முன்னெடுத்து வருகிறார். பாட திட்டங்களை வடிவமைப்பது, ஆய்வு முன்வடிவை வரையறுப்பது, பண்டைய மருத்துவ ஆவணங்களை காப்பது, நவீன வாழ்வின் தேவைகளுக்கு ஏற்ப சித்த மருத்துவ புத்தகங்களை பதிப்பிப்பது என்று பல தளங்களில் தொடர்ந்து பங்களிப்பு ஆற்றி வருகிறார்.

‘இந்திய மருத்துவத்திற்கான வாழ்நாள் பங்களிப்புக்கான’ அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியர் விருதை நாங்கள் அவருக்கு அளிப்பதன் மூலம் இவ்விருது பெருமை கொள்கிறது.


Sunday, 18 June 2017

கட்டுரை போட்டி முடிவுகள்

அரிமளம் வைத்தியசாலை சார்பாக அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியர் நூற்றாண்டை ஒட்டி "இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்" எனும் தலைப்பில்  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ இளநிலை மாணவர்களுக்கான கட்டுரை போட்டி அறிவிக்கபட்டிருந்தது. எல்லா கல்லூரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் போட்டி அறிவிப்பைப்பற்றி கடிதங்கள் அனுப்பபட்டிருந்தன. மீண்டும் ஒருமுறை தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஒரு பெரும் மவுனமே விடையாக கிடைத்தது. மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதால் அறிவித்த மூன்று பரிசுகளுக்கு மாற்றாக இரு பரிசுகளுடன் நிறுத்தி கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். 

இவ்விரு கட்டுரைகளிலும் சில பிழை புரிதல்கள், மிகைகள் உள்ளன எனினும் எங்களுக்கு கிடைக்க பெற்றவைகளில் இவையே சிறந்தவை என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து ஏதுமில்லை. இரண்டு கட்டுரைகளுமே தீர்வுகளை காட்டிலும் தற்கால சிக்கல்களைப் பற்றிய நல்ல புரிதலுடன் எழுதபட்டுள்ளன. 

வெற்றியாளர்களுக்கு ஜூலை 15 அன்று காலை இந்திய மருத்துவ விவாத அரங்கின் போது பரிசுகள் அளிக்கப்படும். இவர்கள் எழுதிய கட்டுரைகள் விரைவில் தளத்தில் ஏற்றப்படும். 

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். 

முதல் பரிசு - அரிமளம் டாக்டர் ராமச்சந்திரன்  நினைவு பரிசு - .ரூ.5000, 
பி.சங்கமித்திரை 
இறுதியாண்டு ஆயுர்வேத பட்டபடிப்பு, 
தர்மா ஆயுர்வேத கல்லூரி 
ஸ்ரீ பெரும்புதூர் 

இரண்டாம் பரிசு ரூ. 3000
ஜெ.இதய தீபன் 
மூன்றாம் ஆண்டு ஆயுர்வேத பட்டபடிப்பு 
தர்மா ஆயுர்வேத கல்லூரி.  
ஸ்ரீ பெரும்புதூர் 

Thursday, 13 April 2017

Arimalam Ramakrishna vaithiyar award for excellence in Indian medicine 2017 - announcement

Commonly known by the name of Arimalam mani Iyer, which is actually the name of his father Subramaniyan, Shri. Ramakrishnan was born on the year of 1917. He belonged to a lineage of Siddha physicians. It was customary to learn from the parents. His father was his guru. He established himself as a reputed Siddha physician at Arimalam, a small village in pudhukottai district. This year 2017 falls to be his centennial; birth anniversary. It has been decided to instill an award in his name for excellence in contribution of Indian system of medicine. 
Award was decided on feedback and assessment from ground level. Few genuine contributors were short listed from both Siddha and Ayurveda system of medicines. Tamil Nadu residence/ origin was decided as an important criteria for the award. Dr. Thiru Narayanan ,Dr. L. Mahadevan, Dr. Sri Ram, Dr. Siva Raman were the final shortlisted names. After careful discussion, we are happy and proud to inform that the  inaugural 2017 edition  'Arimalam Ramakrishna vaithiyar award for excellence in Indian medicine' shall be given to Siddha physician Dr. Thiru Narayanan. 

Award function will be held at Arimalam, in the presence of various important personalities,  on july 15 th of 2017. 

Profile of Dr. Thiru Narayanan    

                              

Dr.T.Thirunarayanan, an alumnus of the Govt. Siddha Medical College, has 28 years of experience in different spheres of Indian Systems of Medicine including teaching, training, clinical and industrial research.

கட்டுரைப் போட்டி அறிவிப்பு

வணக்கம்,
வருகின்ற ஜூலை 15,16 ஆகிய தேதிகளில் புதுகோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரிமளம் வைத்தியர் ராமகிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தீர்மானித்து இருக்கிறோம். அரிமளம் வைத்தியர் என இப்பகுதியில் பரவலாக அறியப்பட்டவர் இப்பகுதியில் சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக சிறந்த முறையில் புரிந்து வந்தவர்.
இந்த விழாவையொட்டி தமிழகத்தை சேர்ந்த  இந்திய மருத்துவ முறைகளுக்குபங்காற்றியவர்களை கவுரவிக்கும் முகமாக ஆண்டு தோறும் ஒரு விருது வழங்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல் இளநிலை சித்த/ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளுக்கு ஓர் கட்டுரை போட்டியையும் வருடம் தோறும் நடத்த முடிவெடுத்துள்ளோம். அவ்வகையில் இவ்வாண்டுக்கான தலைப்பு இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்”. நீண்டகாலமாக பல்வேறு வகைகளில் விவாதிக்கப்படும் தலைப்புதான் எனினும், தற்கால மாணவர்களின் சிந்தனையை அறிந்துகொள்ளும் மற்றொரு முயற்சி மட்டுமே.