வணக்கம்,
வருகின்ற ஜூலை 15,16 ஆகிய தேதிகளில்
புதுகோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரிமளம் வைத்தியர் ராமகிருஷ்ணன் அவர்களின்
நூற்றாண்டு விழாவை கொண்டாட தீர்மானித்து இருக்கிறோம். அரிமளம் வைத்தியர் என
இப்பகுதியில் பரவலாக அறியப்பட்டவர் இப்பகுதியில் சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக சிறந்த
முறையில் புரிந்து வந்தவர்.
இந்த விழாவையொட்டி தமிழகத்தை சேர்ந்த ‘இந்திய மருத்துவ முறைகளுக்கு’ பங்காற்றியவர்களை கவுரவிக்கும் முகமாக ஆண்டு
தோறும் ஒரு விருது வழங்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல் இளநிலை சித்த/ஆயுர்வேத
மருத்துவ பட்டதாரிகளுக்கு ஓர் கட்டுரை போட்டியையும் வருடம் தோறும் நடத்த
முடிவெடுத்துள்ளோம். அவ்வகையில் இவ்வாண்டுக்கான தலைப்பு “இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்”.
நீண்டகாலமாக பல்வேறு வகைகளில் விவாதிக்கப்படும்
தலைப்புதான் எனினும், தற்கால மாணவர்களின் சிந்தனையை அறிந்துகொள்ளும் மற்றொரு
முயற்சி மட்டுமே.
விதிமுறைகள்
1. இளநிலை பட்டதாரி மாணவர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும்.
பயிற்சி மருத்துவர்களும் பங்கு பெறலாம்.
2. கட்டுரை குறைந்தபட்சம் 1500 சொற்களாவது கொண்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 5000.
3. கட்டுரை தமிழில் எழுதப்பட வேண்டும். ஆங்கில தரவுகள்,
பிற்சேர்க்கைகள் அனுமதிக்கப்படும்.
4. கட்டுரை சுயமாக எழுதப்பட வேண்டும். பிறர் கருத்துக்களை
சூட்டும்போது உரிய மேற்கோள், தரவுகளை இணைக்க வேண்டும்.
5. கட்டுரை அனுப்ப கடைசி தேதி – 30-4-2017.
6. முதல் பரிசு –
5000/- இரண்டாம் பரிசு –
3000/- மூன்றாம் பரிசு –
2000/-. இத்துடன் சான்றிதழ்களும்
நினைவுபரிசும் வழங்கப்படும்.
7. கட்டுரை இணையம் வழியாக drsuneelkrishnan@gmail.com எனும் முகவரிக்கு, கணினியில் தமிழில் தட்டச்சு செய்த வடிவத்தில் அனுப்பப்பட
வேண்டும். கையால் எழுதியனுப்புவது ஏற்க படமாட்டாது.
8. இணைய பிரதியை தவிர்த்து, அச்சில் மூன்று பிரதிகள் எடுத்து டாக்டர். சுனில் கிருஷ்ணன்,
அரிமளம் வைத்தியசாலை, 4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், காரைக்குடி – 630002 தபால்/கூரியர் மூலம்
அனுப்ப வேண்டும்.
9. ஜூன் பதினைந்துக்குள் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு,
கட்டுரையாளர்களுக்கு தெரியபடுதப்படும்.
10. கட்டுரைகளை மதிப்பிட மருத்துவர்கள் கொண்ட நடுவர் குழு
அமைக்கப்படும். அவர்களின் முடிவே இறுதியானது.
11. வெற்றி பெற்றவர்கள் விழாவின் போது நேரில் வந்து பரிசுகளை
பெற்றுகொள்ளலாம். இக்கட்டுரைகள் இதற்கென உருவாக்கப்படவுள்ள வலைதளத்தில்
வலையேற்றப்படும்.
12. கட்டுரையாசிரியர் பற்றிய சுய விபரங்கள் ஒரு பக்க அளவிற்குள்
அனுப்ப வேண்டும். அதில் பெயர், வயது, தொடர்பு விலாசம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கல்லூரி பெயர், ஆண்டு – ஆகிய தகவல்கள் இடம்பெற்றால் போதும்.
13. சுய விபரத்துடன் கல்லூரி முதல்வர் அல்லது துறைத்தலைவர் “இது மாணவரின் சொந்த முயற்சியில் உருவானது” என
சான்றளிக்க வேண்டும். மாணவரின் பெயர், வருடம், முதல்வர் அல்லது துறைத்தலைவரின்
கையொப்பமும் முத்திரையும் இடம் பெற வேண்டும்.
\
14. கட்டுரை போட்டி முடிவு வெளிவருவதற்கு முன்பு வெளியே பிரசுரிக்க கூடாது.
நன்றி
டாக்டர். சுனில் கிருஷ்ணன் B.A.M.S
no.4, 7 ஆவது வீதி, சுப்பிரமணியபுரம் வடக்கு விஸ்தரிப்பு, காரைக்குடி –
630002.
ph 9994408908, 04565 226487