வணக்கம்,
வருகின்ற ஜூலை 15,16 ஆகிய தேதிகளில்
புதுகோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரிமளம் வைத்தியர் ராமகிருஷ்ணன் அவர்களின்
நூற்றாண்டு விழாவை கொண்டாட தீர்மானித்து இருக்கிறோம். அரிமளம் வைத்தியர் என
இப்பகுதியில் பரவலாக அறியப்பட்டவர் இப்பகுதியில் சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக சிறந்த
முறையில் புரிந்து வந்தவர்.
இந்த விழாவையொட்டி தமிழகத்தை சேர்ந்த ‘இந்திய மருத்துவ முறைகளுக்கு’ பங்காற்றியவர்களை கவுரவிக்கும் முகமாக ஆண்டு
தோறும் ஒரு விருது வழங்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல் இளநிலை சித்த/ஆயுர்வேத
மருத்துவ பட்டதாரிகளுக்கு ஓர் கட்டுரை போட்டியையும் வருடம் தோறும் நடத்த
முடிவெடுத்துள்ளோம். அவ்வகையில் இவ்வாண்டுக்கான தலைப்பு “இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்”.
நீண்டகாலமாக பல்வேறு வகைகளில் விவாதிக்கப்படும்
தலைப்புதான் எனினும், தற்கால மாணவர்களின் சிந்தனையை அறிந்துகொள்ளும் மற்றொரு
முயற்சி மட்டுமே.