Thursday, 22 August 2024

காந்தியும் ஆயுர்வேதமும்

 (ஃபிப்ரவரி 2020 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)

Pc- Mkgandhi.org, Illustartion from Bahuroopi Gandhi


வானத்திற்கு கீழே அனைத்தையும் பற்றி காந்தி சில கருத்துக்களை கொண்டிருந்தார். எழுதி, நிறுவி, முன்னகர்ந்து என ஓயாமல் அலையடித்துக்கொண்டிருந்தது அவருடைய கருத்துலகம். இத்தனை பரந்த விரிந்த கருத்துலகம் என்பதாலேயே அவரை வரையறுப்பதில் சிக்கல்கள் எழுகின்றன. நமக்குத் தேவையான காந்தியை மேற்கோள்களின் ஊடாக வெட்டியொட்டி உருவாக்கிவிட முடியும். காந்தி இங்கு எல்லாருக்கும் தேவைப்படுகிறார். சில நேரங்களில் கரம் கோர்க்கவும்  சில நேரங்களில் எதிர் நிறுத்தவும்.