Sunday, 18 June 2017

கட்டுரை போட்டி முடிவுகள்

அரிமளம் வைத்தியசாலை சார்பாக அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியர் நூற்றாண்டை ஒட்டி "இந்திய மருத்துவத்தின் நிகழ்கால சவால்களும் தீர்வுகளும்" எனும் தலைப்பில்  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ இளநிலை மாணவர்களுக்கான கட்டுரை போட்டி அறிவிக்கபட்டிருந்தது. எல்லா கல்லூரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் போட்டி அறிவிப்பைப்பற்றி கடிதங்கள் அனுப்பபட்டிருந்தன. மீண்டும் ஒருமுறை தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஒரு பெரும் மவுனமே விடையாக கிடைத்தது. மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதால் அறிவித்த மூன்று பரிசுகளுக்கு மாற்றாக இரு பரிசுகளுடன் நிறுத்தி கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். 

இவ்விரு கட்டுரைகளிலும் சில பிழை புரிதல்கள், மிகைகள் உள்ளன எனினும் எங்களுக்கு கிடைக்க பெற்றவைகளில் இவையே சிறந்தவை என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து ஏதுமில்லை. இரண்டு கட்டுரைகளுமே தீர்வுகளை காட்டிலும் தற்கால சிக்கல்களைப் பற்றிய நல்ல புரிதலுடன் எழுதபட்டுள்ளன. 

வெற்றியாளர்களுக்கு ஜூலை 15 அன்று காலை இந்திய மருத்துவ விவாத அரங்கின் போது பரிசுகள் அளிக்கப்படும். இவர்கள் எழுதிய கட்டுரைகள் விரைவில் தளத்தில் ஏற்றப்படும். 

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். 

முதல் பரிசு - அரிமளம் டாக்டர் ராமச்சந்திரன்  நினைவு பரிசு - .ரூ.5000, 
பி.சங்கமித்திரை 
இறுதியாண்டு ஆயுர்வேத பட்டபடிப்பு, 
தர்மா ஆயுர்வேத கல்லூரி 
ஸ்ரீ பெரும்புதூர் 

இரண்டாம் பரிசு ரூ. 3000
ஜெ.இதய தீபன் 
மூன்றாம் ஆண்டு ஆயுர்வேத பட்டபடிப்பு 
தர்மா ஆயுர்வேத கல்லூரி.  
ஸ்ரீ பெரும்புதூர்